அமெரிக்க இராணுவ சிப்பாய் தொடர்பில் வட கொரியாவின் வெளியிட்டுள்ள தகவல்!
அமெரிக்க இராணுவத்தில் எதிர்நோக்கிய இனப்பாகுபாடு காரணமாகவே அமெரிக்க சிப்பாயான டிராவிஸ் கிங் கடந்த மாதம் தமது நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார் என வட கொரியா தெரிவித்துள்ளது.
தென் கொரியாவிலுள்ள அமெரிக்க படையில் கடமையாற்றிவந்த 23 வயதான குறித்த சிப்பாய், கடந்த ஜூலை 18 ஆம் திகதி சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது வட கொரிய எல்லைக்குள் நுழைந்தார்.
அவர் வடகொரியாவில் தஞ்சம் கோரியதாக வடகொரிய அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வடகொரியாவிடமிருந்து உரிய பதில்கள் கிடைக்கவில்லையென அமெரிக்காவின் பென்டகன் முன்னதாக கூறியது.
இந்தநிலையில், முதல் தடவையாக வட கொரியா, அமெரிக்க இராணுவ சிப்பாய் டிராவிஸ் கிங் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், எல்லைப் பகுதியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் படையினது உதவியுடன் டிராவிஸ் கிங்கின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியவிடமிருந்து இன்றைய தினம் கிடைத்த அறிக்கைக்கு பதிலளித்த பென்டகன் அதிகாரி ஒருவர், ட்ராவிஸ் கிங்கை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதே தமது முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.
No comments