Header Ads

வறட்சியால் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!


யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம், குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வறட்சியால் 21 ,999 குடும்பங்களை சேர்ந்த 70,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 952 குடும்பங்களை சேர்ந்த 3244 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 202 குடும்பங்களை சேர்ந்த 685 பேரும் வவுனியாவில் 450 குடும்பங்களை சேர்ந்த 1120 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, வட மாகாணத்தில் வறட்சியால் 23 ,603 குடும்பங்களை சேர்ந்த 75,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 18,951 குடும்பங்களை சேர்ந்த 63,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8892 குடும்பங்களை சேர்ந்த 29,508 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 7739 குடும்பங்களை சேர்ந்த 25,891 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 2320 குடும்பங்களை சேர்ந்த 7737 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மேல் மாகாணத்தில் 5219 குடும்பங்களை சேர்ந்த 17,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 2321 பேர் உள்ளடங்குகின்றனர்.

வறட்சியான காலநிலையால் மேல் மாகாணத்தில் 2890 பேரும் தென் மாகாணத்தில் 7512 பேரும் மத்திய மாகாணத்தில் 1215 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் 469 குடும்பங்களை சேர்ந்த 1809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என வறட்சி தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 329 குடும்பங்களைச் சேர்ந்த 1324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.