மீண்டும் மின்தடை ஏற்படுமா? எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில தமது ட்விட்டர் தளத்தில் பதிவொன்ற இட்டுள்ள அமைச்சர், தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு தேவையான மேலதிக மின்சாரத்தை மின்சார சபை வழங்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மின்வெட்டு ஏற்படும் என வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
No comments