இலங்கையில் முக்கிய பொருளுக்கு சற்றுமுன் தடை!
சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இலங்கையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிய அவசர அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பணித்துள்ளார்.
விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இலங்கையில் அனுமதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளில், செயலில் உள்ள 40 பூச்சிக்கொல்லிகள் மிகவும் அபாயகரமானவை என்பது சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று பூச்சிக்கொல்லிப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உரிய அறிக்கையை வழங்கினால், அது தொடர்பில் விசாரணை நடத்த முடியும் என்று அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
No comments