Header Ads

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்


நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 341 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 231 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.



No comments

Powered by Blogger.