Header Ads

ஹொங்கொங்கில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டு சாகச வீரர்!

ஹொங்கொங்கில் உயரமான கட்டடத்தின் 68 ஆவது மாடியில் இருந்து வீழ்ந்து பிரான்ஸ் நாட்டு சாகச வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெமி லுசிடி எனும் 30 வயதானவர் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள உயரமான கட்டடங்கள் மற்றும் பாலங்கள் மீது ஏறி சாகசம் செய்து வந்தார். 

இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. 

இந்நிலையில், ரெமி கடந்த வாரம் ஹாங்காங்கில் உள்ள 68 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள பாதுகாவலர்களிடம் 40 ஆவது மாடியில் உள்ள தன்னுடைய நண்பரை பார்க்கப் போவதாகக் கூறி உள்ளே சென்றுள்ளார். 

இதுபற்றி, நண்பர் என கூறியவரிடம் பாதுகாவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ரெமியை தனக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார். இதையடுத்து, பாதுகாவலர் ஒருவர் ரெமியை தேடிச் சென்றுள்ளார். 

அதற்குள் கட்டடத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார் ரெமி. அங்கிருந்து சாகசம் செய்தபோது, தவறி வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றியுள்ளனர். பின்னர் அங்கிருந்த சி.சி.ரி.வி   காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், கட்டடத்தின் வெளிப்பக்கம் சிக்கிக்கொண்ட ரெமி ஜன்னலை தட்டி உதவி கோருகிறார். அந்த வீட்டில் இருந்தவர்கள் வருவதற்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  





No comments

Powered by Blogger.