பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் கண்ணிவெடியில் வாகனம் சிக்கி வெடித்துச் சிதறியதில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ஜ்குர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் வாகனம் சிக்கியது. இதனால் வாகனம் வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் யூனியன் கவுன்சில் தலைவர் ஒருவரும் அடங்குவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல்கத்தார் யூனியன் தலைவர் இஷ்தியாக் யாகூப் மற்றும் சிலர் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது அவர்கள் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து கண்ணிவெடிகளை மர்ம நபர்கள் வைத்துள்ளதாக Panjgur பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுடன் பலூச் விடுமுறை முன்னணி எனும் அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
No comments