50 வருட திருமண பூர்த்தியில் அசத்தலான ஓர் காதல் பரிசு!
அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த லீ வில்சன் என்ற விவசாயி தனது 50 வருட திருமண பூர்த்தியை முன்னிட்டு மனைவிக்காக சூரியகாந்தி பூந்தோட்டமொன்றை பரிசளித்துள்ளார்.
குறித்த விவசாயி தமது 50ஆவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு மனைவிக்காக சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் 1.2 மில்லியன் சூரியகாந்தி செடிகளை நாட்டியிருந்தார் என உள்ளூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அவர் தனது மகனின் உதவியுடன் இரகசியமாக பூச்செடிகளை வளர்த்துள்ளார்.
இது மிகவும் சிறப்பாக உணர வைத்ததாக விவசாயியின் மனைவி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
No comments