அன்புமணி ராமதாஸ் கைது!
ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூரில் சுரங்க விரிவாக்கல் பணிகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து, அன்புமணி ராமதாஸ் உட்பட அவரது கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னர் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களும்; முன்னெடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
No comments