ஜப்பான் வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு
இலங்கைக்கு வருகைத்தந்துள்ள ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யொசிமாசா ஹயாசி இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று இரவு நாட்டை வந்தடைந்தனர்.
இந்தநிலையில், மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஜப்பான், 611 மில்லியன் ரூபாவை மானியமாக வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பான பரிமாற்ற ஆவணங்களில் கையொப்பமிடும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆவணங்களில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி, இலங்கையின் நிதி, அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் ஜப்பானில் உள்ள பல்கலைகழகங்களில், இலங்கையின் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
No comments