Header Ads

செயன்முறைப் பரீட்சை ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஆரம்பம்

 2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 1355 பரீட்சை மத்திய நிலையங்களில் செயன்முறைப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபருக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவரவர் பிரத்தியேக முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.