Header Ads

தென்மாராட்சியில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம்

 தென்மராட்சி பிரதேசசெயலக பிரிவுக்கு உட்பட்ட கைதடி சாவகச்சேரி கொடிகாமம் மற்றும் நுனாவில் IOC ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவும் மாவட்ட செயலக அறிவுறுத்தல்களை பின்பற்றியும் கிடைக்கின்ற எரிபொருளினை சீரான முறையில் விநியோகிக்கும் நடவெடிக்கை ஒழுங்காக இடம்பெற்று வருவதாக பலரும் குறிப்பிடுகின்றனைர்.

எரிபெருள் விநியோகமானது சீரானமுறையில் கண்காணிப்பு செய்வதுடன் அட்டை பதிவு இறுதி இலக்க நடைமுறை என்பனவும் பின்பற்றப்படுகின்றது.

நுனாவில் Ioc எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கிராமசேவையாளர் பிரிவினை அடிப்படையாக கொண்டு எரிபொருள் வழங்கப்பட்டுவருவதுடன். அந்தந்த கிராம சேவையாளர்களால் விநியோகம் கண்காணிக்கப்படுகின்றது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் விநியோகத்தை சீரானமுறையில் கண்காணித்து ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டுவருவதாக பலரும்  குறிப்பிட்டுள்ளனர்.




No comments

Powered by Blogger.