Header Ads

முன்னாள் கலைபண்பாட்டுக்கழக மிருதங்க கலைஞர் KP மூர்த்தி காலமானார்.

 முன்னாள் கலைபண்பாட்டுக்கழக மிருதங்க கலைஞரும் நாடக கலைஞனுமான KP மூர்த்தி என அழைக்கப்படும் கணபதி பாஸ்கரமூர்த்தி மாரடைப்பு காரணமாக 26/04/2022 இன்று காலமானார்.

 மந்துவில் கிழக்கை பிறப்பிடமாக கொண்ட KP மூர்த்தி கலைபாண்பாட்டு கழகத்துடன் இணைந்து பல்வேறு கலைப்பணியில் ஈடுபட்டுவந்துள்ளார்.

 சிறந்த மிருதங்க வித்துவான இவர் பல விழாக்கள் வீதிநாடகங்கள் போண்றவற்றுக்கு மிருதங்க இசை வழங்கியுள்ளார். பல நாடகங்கள், வீதிநாடகங்களிலும் இவர் தனது கலைத்திறமையால் நடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.

இவரது இழப்பு கலைத்துறைக்கு பேரிழப்பாகும். 

அண்ணாரது இறுதிக்கிரியைகள் 27/04/2022 மாலை 1:00மணிக்கு மந்துவில் கிழக்கில் அமைந்துள்ள அண்ணாரின் இல்லத்தில் இடம்பெற்று

 தகனக்கிரியை வேம்பிராய் இந்து மயாணத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



No comments

Powered by Blogger.