Header Ads

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மந்தமாக செயல்பட்டதாக பிரதமர் யோஷிஹைட் சுகா மீது விமர்சனங்கள் எழுந்தன. யோஷிஹைட் சுகா கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மந்தமாக செயல்பட்டதாக பிரதமர் யோஷிஹைட் சுகா மீது விமர்சனங்கள் எழுந்தன. டோக்கியோ : ஜப்பானின் முதல் இளம் வயது பிரதமர் மற்றும் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்கிற பெருமைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே. இவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ஷின்ஜோ அபேயின் அரசில் அமைச்சரவை தலைமை செயலாளராக இருந்து வந்த யோஷிஹைட் சுகா ஜப்பானின் புதிய பிரதமராக பதவி ஏற்றார். யோஷிஹைட் சுகா, ஷின்ஜோ அபேவை போல அரசியல் குடும்பத்தின் வாரிசாக இல்லாமல், ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பொது மக்களிடமிருந்து வந்த தலைவராக பார்க்கப்பட்டார். இதனால் அவர் தனது பதவி காலத்தின் ஆரம்பத்திலேயே மக்களின் ஆதரவை அதிக அளவில் பெற்றார். மேலும் அவர் பிரதமர் பதவிக்கு வந்ததும் நாட்டில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட தொடர்ச்சியான நடைமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார். இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்தது. சுமார் 70 சதவீத ஜப்பானியர்கள் யோஷிஹைட் சுகாவை ஒரு சிறந்த பிரதமராக ஏற்று அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.‌ ஆனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மந்தமாக செயல்பட்டதாக பிரதமர் யோஷிஹைட் சுகா மீது விமர்சனங்கள் எழுந்தன. அதோடு கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதால் பிரதமர் யோஷிஹைட் சுகா மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்தக் காரணங்களால் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெரிதும் சரிந்தது. சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு 70 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக குறைந்து விட்டதாக தெரிவித்தன. இந்த நிலையில் வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ள ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் புதிய தலைவரை‌ தேர்வு செய்வதற்கான தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த மாத இறுதியில் பிரதமர் பதவியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டோக்கியோவில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேசிய யோஷிஹைட் சுகா கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார். ஜப்பானை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் அரசியல் கட்சியின் தலைவர் யாரோ அவரே அரசின் தலைவராகவும் அதாவது பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார்.‌ அந்த வகையில் பிரதமர் யோஷிஹைட் சுகா கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளதால், அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என தெரிகிறது. அதன்படி ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் ஜப்பானின் புதிய பிரதமராக பதவி ஏற்பார். ஜப்பானின் தடுப்பூசி திட்ட தலைவர் டாரோ கோனா மற்றும் மத்திய உள்துறை மந்திரி சானே தகைச்சி ஆகிய இருவரும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களாக அறியப்படுவதாகவும் இவர்களில் ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

முல்லா பராதா்

ஆப்கானிஸ்தானில் தங்களது தலைமையிலான புதிய அரசு குறித்த அறிவிப்பு சனிக்கிழமை (செப். 4) வெளியிடப்படும் என தலிபான்கள் அறிவித்துள்ளனா்.

புதிய அரசின் அதிபராக தலிபான்கள் இயக்கத்தின் இணை நிறுவனரும் அரசியல் பிரிவுத் தலைவருமான முல்லா அப்துல் கனி பராதா் (53) பதவியேற்பாா் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஸபிஹுல்லா முஜாஹித் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் புதிய அரசை வெள்ளிக்கிழமை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த முடிவு ஒரு நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு குறித்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என்றாா் அவா்.

கத்தாா் தலைநகா் தோஹாவில் இயங்கி வரும் தலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவா் முல்லா அப்துல் கனி பராதா் புதிய அரசில் அதிபராகப் பொறுப்பேற்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தலிபான் இயக்கத்தை தொடங்கிய முல்லா ஒமரின் மகன் முல்லா முகமது யாகூப், ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஸாய் ஆகியோா் புதிய அரசில் முக்கியப் பதவி வகிப்பாா்கள் என மற்றொரு வட்டாரம் தெரிவித்தது.

முன்னதாக, ஈரான் பாணியில் தலைமை மதகுருவை உச்சநிலைத் தலைவராகக் கொண்ட ஆட்சிக் கட்டமைப்புடன் தங்களது புதிய அரசு அமையவிருப்பதாக தலிபான்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தலிபான்களின் தகவல் மற்றும் கலாசாரக் குழுவைச் சோ்ந்த மூத்த அதிகாரி முஃப்தி இனாமுல்லா சமங்கனி, ‘ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கான அனைத்து ஆலோசனைகளும் நிறைவடைந்துவிட்டன. புதிய அமைச்சரவையை அமைப்பதற்குத் தேவையான ஆலோசனையும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசானது ஈரானில் உள்ளதைப் போன்ற ஆட்சிக் கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கும். புதிய அரசில் தலைமை மதகுருவாக தலிபான் தலைவா் முல்லா அகுண்ட்ஸாதா (60) பொறுப்பு வகிப்பாா்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், புதிய அரசு குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என்று தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் தற்போது தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான ஆளுநா்கள், காவல் துறை தலைமை அதிகாரிகள் உள்ளிட்டவா்களை தலிபான்கள் நியமித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படையினா் ஆக. 31-ஆம் தேதி முழுமையாகத் திரும்பப் பெறப்படுவா் என அமெரிக்க அதிபா் பைடன் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி அந்தப் பணி நிறைவடைந்துள்ளது. அதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த மாதம் 15-ஆம் தேதி கைப்பற்றினா்.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்தபோது ஷரியா சட்டத்தை கடுமையாக அமல்படுத்தினா். இந்த முறை மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும், முந்தைய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவா்கள் பழிவாங்கப்பட மாட்டாா்கள் எனவும் மிதமான நிலைப்பாட்டை அறிவித்துள்ளனா். ஆனால், தலிபான்களின் இந்த அறிவிப்பில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. புதிய அரசுக்கு அங்கீகாரம், நிதியுதவி உள்ளிட்டவை குறித்து அதன் செயல்பாட்டைப் பொருத்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.