முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்று காரணமாக இன்று காலமானார்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலமானார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைபெற்றுவந்தார் சிகிச்சை பலனின்றி இன்று காலை தமது 65 ஆவது வயதில் அவர் காலமானார்.
கடந்த தேர்தலில் இனவாத கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்ட போது, அதை வெளிப்படையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், இலங்கை ஒரு பௌத்த நாடல்ல என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவரும், புஞ்சி பொரள்ளையில் பௌத்த துறவிகளின் எதிர்ப்பையும் மீறி போக்குவரத்துக்கு தடையாக இருந்த ஒரு தேவாலயத்தை உடைத்தெரிந்தார்
கோவிட் தாக்கத்துக்கு உள்ளான மங்கள சமரவீர ஆகஸ்ட் 13 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார், அங்கு அவர் இறக்கும் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மங்கள சமரவீர அவர்கள் முன்னாள் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மாத்தறையில் அதன் முக்கிய அமைப்பாளராக அரசியலில் நுழைந்த அவர், 1989 இல் மாத்தறை மாவட்டத்தின் பிரதிநிதியாக முதலில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
கடந்த நல்லாட்சி அரசில் நிதி அமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்த அவர் 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட சமகி ஜன பலவேகயாவில் (ஸ்JB) சேர்ந்தார், இருப்பினும், அவர் இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில் இருந்து வாபஸ் ஆகி, அரசியலில் இருந்து சற்று ஒதுங்க்கி இருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
சந்திரிக்கா பண்டாரனாயக்க அரசில் முக்கிய புள்ளியாக இருந்த அவர் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதில் அதீத அக்கரையுடன் செயல்பட்டார், மஹிந்த ஆட்சியில் பிரதமர் பதவி அவருக்கு வழங்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், அது நடைபெறாததால் விரக்தியுற்ற அவர் எதிரணி பக்கம் தாவினார்.
No comments