தமிழக முதல்வர் மு.க ஸ்ராலினுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலினுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 317 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கும் நலத்திட்ட நடவடிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வசிக்கும் எமது ஈழத்தமிழர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டமைப்பின் சார்பில் அவருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க ஆலோசித்துள்ள அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிரந்தரமான வதிவிட வசதிகளை ஏற்படுத்துதல், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலன் கருதிய வளர்ச்சித் திட்டங்களுடன் அவர்களின் உயர்கல்விக்கான உதவித் திட்டம் மற்றும் தாயகத்துக்கு மீளக்குடியமர விரும்புகின்றவர்கள்.
தொடர்பான தீர்மானங்களை முன்னெடுப்பதற்கான குழுவையும் அமைத்து ஆக்கபூர்வமாக நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
முதன்முறையாக தமிழ்நாடு சட்ட சபையில் ஒரு முதல்வர் இப்படியான திட்டங்களை அறிவித்துள்ளதோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளமையானது ஓர் ஆக்கபூர்வமான செயலாகும்.
இதற்காக எமது மக்கள் சார்பாகவும் கூட்டமைப்பு சார்பிலும் உளம் கனிந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றோம் - என்றார்
No comments