Header Ads

பிளாஸ்டிக் கழிவுகளால் மட்டுமே உருவாக்கப்பட்ட தீவு; எங்குள்ளது தெரியுமா?

 உலகில் ஏழு கண்டங்கள் உண்டு என்றுதானே உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட எட்டாவது கண்டம் ஒன்று உள்ளது தெரியுமா...? அதுதான் பிளாஸ்டிக் கண்டம் என்றழைக்கப்படும் பெரிய பசிபிக் குப்பை தீவு அல்லது குப்பை இணைப்பு (Great Pacific Garbage Patch).

மனிதர்களால் கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் மட்டுமே உருவாக்கப்பட்ட தீவு அது. 2018ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வின்படி இதன் அளவு 14 லட்சம் சதுர கிலோமீட்டர் (பிரான்ஸ் நாட்டை விட மூன்று மடங்கு பெரியது).

இந்த கழிவு பொருள் கூட்டத்தில் ஒரு லட்சம் ஜோடி நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இவை மேலும் மேலும் சிறிய துகள்களாக மாறுமே அன்றி என்றுமே மக்கி போகாது. எனவே மாற்றங்களை நம்மிடமிருந்தே முன்னெடுப்போம் .

வெளியே செல்லும்போது பாட்டில் குடிநீரை பயன்படுத்தாமல் வீட்டிலிருந்தே தண்ணீரை கொண்டு செல்லுங்கள். வீட்டிலிருந்தே துணி பைகளை கொண்டு செல்லுங்கள். இது எதுவுமே உங்கள் தகுதியை குறைக்கும் செயல்கள் அல்ல. உங்களால் முடிந்த சிறிய சிறிய மாற்றங்களை நாம் வாழும் பூமிக்காக தயங்காது முன்னெடுங்கள்.









 

No comments

Powered by Blogger.