அமைச்சர் பந்துல வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்!
நெல், அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் களஞ்சியசாலைகளை பராமரித்து வரும் நபர்கள் ஒரு வாரக் காலப்பகுதியினுள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (11) வௌியிடப்படவுள்ளது.
இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
மறைத்து வைக்கப்பட்டுள்ள அரசி மற்றும் நெல்லை வௌியில் கொண்டு வருவதற்காக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விசேடமாக வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தமது அறுவடைகளை சேமித்து வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் விதிகள் பொருந்தாது என அமைச்சர் தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments