இலங்கைப் பிரதமராக நாமல்; அரசாங்கம் விடுத்த அறிவிப்பு
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ அடுத்த ஆண்டு அல்லது அடுத்த பொதுத் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் பிரதமராக நியமிக்கப்படுவார் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதுபோன்ற கூற்றுக்கள் வெறும் ‘அரசியல் வாசகங்கள்’ என கூறினார். அத்துடன் தற்போது பரவி வரும் கதைகளை நீங்கள் பார்த்தால், நாளை வேறு யாராவது நியமிக்கப்படுவதை நீங்கள் காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற கூற்றுக்களை ஊடகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கெஹெலிய கூறினார். மேலும் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படாவிட்டால் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments