கடலில் மூழ்கும் கப்பலில் இருந்த பொருட்கள் இவைதான்; வெளியானது பட்டியல்!
கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீப்பிடித்த, கடலில் மூழ்கும் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் அபாயகரமான இரசாயனங்கள் அடங்கிய பட்டியலை சுற்றுச்சூழல் நீதி மையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகேகூறுகையில், ஒரு கொள்கலனில் அபாயகரமான இரசாயனங்கள் இருந்துள்ளன, ஏனையவற்றில் அலுமினிய பதப்படுத்துதல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்துள்ளன.
இந்நிலையில், குறித்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த பொருட்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமை உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை மக்களின் நலனுக்காக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த பொருட்கள் நாட்டின் கடற்கரை பிரதேசங்களில் கரையொதுங்கிக் கொண்டிருக்கின்றது. குறித்த கப்பலின் குப்பைகள் மற்றும் பொதிகளுடன் மக்கள் தொடர்பு கொள்வதைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் வகையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments