Header Ads

நாடு முழுமையாக திறக்கப்படாதா? இராணுவத் தளபதியின் மறைமுக ஒப்புதல்


 நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் அது குறித்து இன்னும் தீர்மானிகக்ப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து தினமும் 3 ஆயிரம் கோவிட் நோளிகள் அடையாளம் காணப்படுவது கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைமை.

இதனால், மக்களின் பாதுகாப்பை கவனததில் கொண்டு, எடுக்க வேண்டிய தீர்மானங்கள் சரியான நேரத்தில் எடுக்கப்படும். எவ்வாறாயினும் என்றோ ஒரு நாள் மீண்டும் நாடு திறக்கப்படும் வரை மக்கள் வீடுகளில் சுகாதார பாதுகாப்புடன் இருந்து தொற்று நோயை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என வெளியாகியுள்ள செய்தி குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.