நிறத்தின் அடிப்படையில் பிரிக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் - அஜித் ரோஹண
நிறத்தின் அடிப்படையிலே அத்தியாவசிய சேவைகளானது பிரிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள வேலையில் அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிப்பதற்கு நாளை முதல் விஷேட 11 ஸ்டிகர்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பச்சை நிறம் சுகாதார பிரிவினருக்கும், இளம் நீல நிறம் முப்படை மற்றும் பொலிஸாருக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஊதா நிறம் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பேருக்கும், இளம் பழுப்பு நிறம் இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் தொழிற்சாலை துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும், மஞ்சள் நிறம் அத்தியவசிய பொருட்கள் விநியோகத்திற்கும் வழங்கப்படவுள்ளது.
மேலும் செம்மஞ்சள் நிறம் ஊடக துறையினருக்கும், வௌ்ளை நிறம் வௌிநாடுகளுக்கு செல்ல பயணிப்போருக்கும், கருப்பு நிறம் இறுதி சடங்கு, மருத்துவ பரிசோதனை போன்றவற்றிற்கும் சாம்பல் நிறம் உணவுகளை விநியோகிப்பதற்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments