கொழும்பில் அதி வீரியம் கொண்ட கொவிட் வைரஸ்; தடுப்பூசி போட்டவர்களுக்கும் அபாயம்
கொழும்பில் அதி வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
இதனை அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த முறை அடையாளம் காணப்பட்ட B117 வைரஸ் பிரிவை விடவும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள B.1.617.2 என்ற வைரஸ் 50 வீதம் வீரியம் கொண்டதாகவும் அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.
இதேவேளை கொவிட் தடுப்பூசியின் ஒரு மருந்தளவு (DOSE) பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments