Header Ads

நடிகை பியூமியால் பதவி பறிபோகும் நிலையில் இலங்கையின் முக்கிய அமைச்சர்

 

நடிகை பியூமி ஹன்சமாலிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து சர்ச்சையில் சிக்கிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை பதவியில் இருந்து விலகுமாறு கடும் அழுத்தம் கொடுப்பதாக தெரிவிகப்படுகின்றது.

நடிகை பியூமி ஹன்சமாலிக்கு வழங்கிய தனிமைப்படுத்தல் உத்தரவில் அமைச்சர் தலையிட்டதாகக் கூறப்படுவதால் அமைச்சர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.க்கள் பலர் கருதுவதாக கூறப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி அழகுக்கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற நடிகை பியூமி ஹன்சமாலி உட்பட 15 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மாற்று ஆடையில்லை என பியூமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அவருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்திருந்ததுடன், பியுமி ஹன்சமாலியின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்ததுடன், பஸ்ஸிற்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிகாரிக்கு கூறி கொஸ்வத்த பிரதேசத்தில் பஸ்ஸினை நிறுத்தும் படி உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.

அந்த சந்தர்ப்பத்தில் அவர்களது உறவினர்களிடம் கூறி தனிமைப்படுத்தலில் ஈடுபடும் காலத்தில் பயன்படுத்த ஆடைகளை அவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கு புறப்படுவதற்கு முன்னர் நடிகை தனது வீட்டிலிருந்து சில துணிகளைப் பெற உதவுவதில் மட்டுமே தலையிட்டதாக அமைச்சர் நேற்று அறிக்கை ஒன்றினை ம் வெளியிட்டார்.

இதையடுத்தே அமைச்சர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.க்கள் பலர் கருதுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇





No comments

Powered by Blogger.