Header Ads

இலங்கைக்குள் நுளையும் சீன விஞ்ஞானிகள்


கொவிட்-19 தடுப்பு அங்கிகளுடன் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் ஜூன் 2 ஆம் திகதி கொழும்பு கடற்கரை ஒன்றிலிருந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரசாயனங்களையும் பிளாஸ்டிக்குகளையும் அப்புறப்படுத்துவதில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர்.

கடலுக்குள் சுமார் 9.5 கடல் மைல்களுக்கு அப்பால் வெளிநாட்டுக்கப்பலொன்றின் எரிந்துபோன பாகங்கள் மழைக்கால கடுங்காற்றுக்கு மத்தியில் மிதந்து அசைந்தாடிக்கொண்டிருந்ததை அவர்களால் காணக்கூடியதாக இருந்தது. மே 20 இரசாயனங்களை ஏற்றிக்கொண்டுவந்த எக்ஸ் பிரஸ் பேரள் என்ற கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் வெடித்து தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.

கப்பலில் இருந்த கொள்கலன்களில் பலவும் ஏனைய மாசுபடுத்தும் பொருட்களும் கடலுக்குள் வீழ்ந்து கரையோரம் அடித்துவரப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாரதூரமான அச்சுறுத்தலை தோற்றுவித்துக்கொண்டிருந்தன.

எரிந்து கடலில் மூழ்கிய எக்ஸ் பிரெஸ் பேரள் கப்பலின் பாகங்களை கரையோரத்தில் இருந்து இலங்கை பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தும் காட்சி. இலங்கையில் நீர்வளங்கள் பேணிப்பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதான நிறுவனமான தேசிய தேசிய நீர்வளங்கள் ஆராய்ச்சி - அபிவிருத்தி நிறுவனத்திடமிருந்து ( நாரா) கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான சீன - இலங்கை கூட்டு நிலையத்தைச் சேர்ந்த சீன நிபுணர்களுக்கு கப்பல் வெடித்த இரண்டாம் நாள் வேண்டுகோள் கிடைக்கப்பெற்றது.

சிதைந்த கப்பலின் பாகங்களினால் ஏற்படக்கூடிய மாசுபடுத்தலின் அளவையும் இரசாயனங்கள் பரவக்கூடிய பரப்பளவையும் ஒரு கருவியின் ஊடாக அறவிடுவதற்கு அந்த கூட்டு நிலையம் உதவியது. தென்மேற்கு பருவமழை இலங்கையில் மே மாதத்தில் அடிக்கடி பெய்கிறது.

தென்னிலங்கையில் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான சீன - இலங்கை கூட்டு நிலையத்தின் ஒரு அவதான மையத்தில் தன்னியக்க பருவகால நிலையம் பருவகால மழையின் தாக்கங்களை எதிர்வு (ஏ.டபிள்யூ.எஸ்.) கூறுவதற்கான தகவல்களை தரும் பணியைச் செய்கிறது, எதிர்வுகூறும் கருவிகளின துல்லியத்தை ஏ.டபிள்யூ.எஸ்.மேம்படுத்தக்கூடியதாகும்.

அத்துடன் எரிந்துபோன சரக்குக் கப்பலினால் விளைவிக்கப்படக்கூடிய கடல்சார் சூழல் அனர்த்தங்களையும் அது எதிர்வு கூறக்கூடியதாகும் என்று கூட்டு நிலையத்தின இணை பேராசிரியரான லுவோ யாவோ சின்ஹுவாவுக்கு கூறினார்.

வளிமண்டல அழுத்தம், காற்றின் வேகம், திசை, சூரிய கதிரியக்கம் மற்றும் ஏனைய கடல்சார் வளிமண்டல அளவெல்லைகள் ஆகியவற்றை கண்காணிக்கக்கூடியது ஏ.டபள்யூ.எஸ்.நீண்டகால அவதானிப்புகளின் ஊடாக ஒன்றுதிரட்டப்பட்ட தரவுகளை இந்து சமுத்திரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலநிலை மாற்றம்,கடல்மட்ட அதிகரிப்பு மற்றும் ஏனைய பிரச்சினைகளின் தாக்கங்களை ஆராய பயன்படுத்தமுடியும் என்று லுவோ யாவோ கூறினார்.

இந்து சமுத்திரத்துக்கும் பசுபிக் சமுத்திரத்துக்கும் இடையில் மிதவெப்பமான நீரோட்டங்களை கொண்ட ஒரு பகுதியில் இலங்கை அமைந்திருக்கிறது, பருவமழையின் பாதையில் அடிக்கடி கடல்சார் அனர்த்தங்கள் நிகழ்கின்ற மிகவும் சுறுசுறுப்பான பிராந்தியங்களில் ஒன்றாகவும் இலங்கை இருக்கிறது என்றும் அவர் கூறினார்

.கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் பற்றாக்குறை, பருவகால மழை வானிலையை எதிர்வு கூறக்கூடிய முதிர்ச்சியடைந்த முறைமை ஒன்று இல்லாமை காரணமாக இலங்கை கடல்சார் அனர்த்தங்களினால் எளிதில் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது.

கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான சீன - இலங்கை கூட்டு நிலையம் காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் ஆற்றலை பலப்படுத்துமுகமாக ருஹுணு பல்கலைக்கழகத்தில் 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும்.இலங்கையில் கடற்தொழில் மற்றும் கடல்சார் விஞ்ஞான வளாகத்தைக் கொண்ட ஒரே பல்கலைக்கழகம் ருஹுணு பல்கலைக்கழகமேயாகும்.

அவதானிப்பு வலைப்பின்னலைப்பற்றி முன்னர் ஒரு தடவை மிகவும் உயர்வாகப் பேசிய முன்னாள் கடற்தொழில் அமைச்சர் காமினி சொய்சா இந்த வலைப்பின்னல் இலங்கையில் கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கான விஞ்ஞான மற்றும் தொழிலநுட்ப ஆதரவை வழங்கியிருக்கிறது.மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியைபபாதிக்கின்ற சுனாமிகள், சூறாவளி போன்ற கடல்சார் வானிலை அனர்த்தங்களையும் அது குறைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான சீன - இலங்கை கூட்டு நிலையத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கொன்றின் ஆரம்ப தினத்தன்று இலங்கைமாணவர்களுடன் சீன பயிற்சியாளர் ஒருவர். கூட்டு நிலையத்தில் அதிகாரிகள் பரிமாற்றத்தை பொறுத்தவரை, கொவிட்-19 பெருந்தொற்று சில சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கின்ற போதிலும் கூட, நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை.

இவ்வருடம் மார்ச் மாதத்தில், பருவமழை காலநிலை மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் தொடர்பாக சீன - இலங்கை கூட்டு பயிற்சிப்பட்டறை இரு நாடுகளிலும் திட்டமிடப்படி ஏககாலத்தில் இணையவழி மூலமும் உத்தியோகபூர்வ வழிமுறைகளிலும் நடத்தப்படப்பட்டது. " ஒரு தீவு நாடு என்ற வகையில் இலங்கை குறிப்பாக பருவகால மழையினால் கவலையடைகிறது.

பருவமழை பிரச்சினை தொடர்பில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மேம்பட்டிருக்கும் ஒத்துழைப்பு காலைநிலை மாற்றத்தின் விளைவான அனர்த்தங்களை குறைப்பது மற்றும் சுற்றுச்சூழல் மீதான பருவமழையின் தாக்கம் ஆகியவற்றை சிறப்பான முறையில் விளங்கிக்கொள்ள வகைசெய்யும் என்று கூட்டு நிலையத்தின் இணை பணிப்பாளர் திலக் கமகே கூறினார்.

சமுத்திரம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான கருத்தரங்குகள் காலநிலை மாற்ற பிரச்சினைகளை கையாளுவதில் இலங்கையின் ஆற்றலை பெருமளவுக்கு மேம்படுத்தியிருப்பதுடன் சர்வதேச அரங்குகளில் செல்வாக்கை செலுத்தவும் வகைசெய்கிறது என்றும் கமமே சொன்னார்.

சீன - இலங்கை கூட்டு நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஆராய்ச்சியை செய்திருப்பது மாத்திரமல்ல, இலங்கையில் கடல்சார் விஞ்ஞான திறனை வளர்ப்பதிலும் கவனத்தை செலுத்தியிருக்கிறது என்று அதன் பணிப்பாளர் ஷாங் ஷாங்செங் சின்ஹுவாவுக்கு கூறினார்.

இந்த கூட்டு நிலையம் கடல்சார் விஞ்ஞானம் மற்றும் சுற்றாடல் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் சுுமார் 30 இலங்கை பட்டதாரிகளை பயிற்றுவித்திருக்கிறது.

அவர்கள் இலங்கையில் மேற்கொண்டும் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். கூட்டு நிலையம் இலங்கை நிறுவனங்களில் நிலநீர் ஆய்வியல் பயிற்சிகளை நடத்துவதுடன் வானிலை அவதானிப்பு, கருவிகள் பயன்பாடு மற்றும் பராமரிப்புக்கான ஆளணியினருக்கு பயிற்சியளித்திருக்கிறது. சரித் மதுசகா என்பவர் தற்போது சீன - இலங்கை கூட்டு நிலையத்திலும் அவர் முன்னர் கல்வி கற்ற ருஹுணு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றுகிறார்.

அவரே இலங்கையில் இருந்து சென்று சீனாவில் பயிற்சி பெற்ற முதல்முதலானஆழியியல் முதுமாணிப் பட்டதாரி மாணவராவார். ருஹுணு பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான சீன-இலங்கை கூட்டு நிலையத்தில் நிறுவப்பட்டிருக்கும் புதிய செய்மதி நிலையத்தில் இலங்கை ஆராய்ச்சியாளர் ஒருவர் உபகரணப் பரிசோதனையில் ஈடுபடுகிறார்.

" நான் சீனாவுக்குச் சென்றதறகு பிறகு தனது வகுப்புத்தோழர்களில் பலர் சீனா பக்கமே திரும்பியிருக்கிறார்கள் " என்று மதுசகா கூறினார்.

இலங்கையில் ஆழியியலிலுக்கும் கடல்சார் விஞ்ஞானத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பை கூட்டு நிலையம் செய்திருக்கிறது என்று இலங்கையின் ஒரு சிரேஷ்ட ஆழியியல் ஆய்வாளரான நளின் விக்கிரமநாயக்க சின்ஹுவாவிடம் கூறினார்.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇No comments

Powered by Blogger.