நாடளாவிய ரீதியில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தின் சிறப்பு பிரிவு
கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி பயணிப்பவர்களின் தகவல்களைத் தேடும் வகையில் நாடளாவிய ரீதியில் சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீறப்படும் இடங்கள் குறித்து பொலிஸார் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது இந்த குழுக்களின் பொறுப்பு என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் பலரின் நடத்தை திருப்திகரமாக இருப்பதாகவும் ஆனால் சிலரின் நடத்தை வருந்தத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
மேலும் நாட்டை மீண்டும் திறக்கும் முடிவு மக்களின் செயற்பாடுகளால் மாற்றப்பட்டது . மக்கள் சரியான முறையில் செயற்பட்டால், நாட்டை உரிய திகதியில் திறக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments