அமெரிக்காவில் ரஜினிகாந்த்; வைரலாகும் புகைப்படம்!
அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந் நடந்து வரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும் அவாப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்வார்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் ரஜினி. சிகிச்சையுடன் சிறிது நாட்கள் ஓய்வெடுத்து விட்டு சென்னை திரும்பும் அவர், அதன் பிறகு அண்ணாத்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.
No comments