விரைவில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு: எது தொடர்பில் தெரியுமா?
பொதுஜனபெரமுனவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர கரியவசத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமெரிக்காவில் இருக்கும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக பொதுஜனபெரமுனவின் பங்காளிக்கட்சித் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து அதுபற்றிய கருத்தாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அறிய முடிகின்றது.
எனினும், இதுபற்றி சாகர காரியவசத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, எமது கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பேசினார்கள்” என்று மட்டும் குறிப்பிட்டார். அதற்கு அப்பால் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அவர் தயாரில்லை என்றும் கூறினார்.
இதேவேளை, தற்போதைய முரண்பாட்டு நிலைமைகள் மற்றும் அடுத்தகட்டமாக எவ்விதமான விடயங்கள் நடைபெறப்போகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் விரைவில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவேன் என்றுஅவர் குறிப்பிட்டார்.
அதற்கு உகந்த காலமும் நேரமும் நிச்சயமாக அடுத்துவரும் காலப்பகுதியில் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments