Header Ads

இலங்கை விரையவுள்ள ஐ. நா விசேட குழு!!

கப்பல் விபத்தால் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதும் அதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த குழுவின் நோக்கம் என அந்த சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவித்தார்.

இதேவேளை, தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக ஏற்படும் கடல் மாசுபாட்டினை நிவர்த்தி செய்ய நோர்வே கடலோர நிர்வாகம் தொலைதூர உதவிகளை வழங்கியுள்ளது.

நோர்வே தூதுவர் ட்ரைன் ஜெரான்லி எஸ்கெடல் , நோர்வே நிபுணர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

 

No comments

Powered by Blogger.