ஒரு நடிகையின் கைது ஸ்ரீலங்காவில் பெரும் அழிவை மூடி மறைத்துவிட்டது! அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகம்
இலங்கையின் சுற்று சூழலின் பாதிப்பை இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்ற சிங்கள நடிகை தொடர்பில் பிரபல சர்வதேச சஞ்சிகையான economist செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரத்தில் இலங்கையில் அதிகமாக பேசப்பட்ட தலைப்பாக நடிகை பியுமி ஹன்சமாலி காணப்பட்டார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிய தினம் 28 வயதான நடிகை பியுமி ஹன்சமாலி, அழகு கலை நிபுணர் உட்பட 13 பேர் பிறந்த நாள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டமையினால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து கூகுள் தேடு பொறி உட்பட சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடப்பட்ட ஒருவராக நடிகை பியுமி ஹன்சமாலி காணப்பட்டுள்ளார் என economist இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் இலங்கையின் கடற்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் இலங்கையர்கள் உட்பட அமைப்புகள் பலவற்றின் கருத்துகளை பியுமி ஹன்சமாலியின் கைது மூடி மறைத்துள்ளதாக economist செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments