இலங்கையில் நீடிக்கும் அபாயம்: அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை
இலங்கையில் மேலும் 820 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 246,091 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களில் 211,186 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,769 ஆக அதிகரித்துள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments