பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்ய சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவிப்பு!
24 பேரை கைது செய்ய சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவிப்பு.
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 24 பேரை கைது செய்வது தொடர்பில் சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபடட 13 பேர் இதில் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண, இவர்களுள் இரண்டு பேர் தற்போது இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments