வாழைச்சேனையில் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்!
வாழைச்சேனையில் இருவேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரும், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஓட்டமாவடி பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
அத்தோடு வாழைச்சேனை 18ம் கட்டை பகுதியில் மேலும் ஒரு வீட்டினை முற்றுகையிட்ட போது சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதாகியுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை வாழைச்சேனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments