யாழ். நல்லூரை மையமாக கொண்டு பரவிவரும் ஐரோப்பிய திரிபு வைரஸ்
இலங்கையில் கொரோனா 3வது அலை பரவல் முன்னிலும் பார்க்க வீரியமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அதற்கு திரிபு பெற்ற கொவிட்-19 வைரஸ் தாக்கமே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரித்தானிய திரிபு வைரஸ் இலங்கையின் சில இடங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ். நல்லுரை மையமாக கொண்டு ஐரோப்பிய திரிபு கொவிட் - 19 வைரஸ் பரிவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதற்கமைவாக டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் பீ.1.428 என்ற வைரஸ் திரிபுடன் யாழ்ப்பாணத்திலும் பலர் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் நல்லூரை மையமாக கொண்டு குறித்த வைரஸ் பரவி வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments