Header Ads

மற்றுமொரு பிரதேசம் முடக்கம்; உட்செல்ல வெளியேற தடை


இன்று காலை முதல் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நான்கு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

கினிகத்தேனை பகுதியில் 317சீ – மொரேஹேன்கம, 316ஈ , மில்லகாமுல்ல, அட்டன் பகுதியில் 319சீ, வெளிஓயா மற்றும் நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் 315டீ , விதுலிபுர மேற்கு ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமைய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.