இனி இவ்வாறு செய்யாதீர்கள்; பொலிஸாருக்கு உயர்பீடத்தில் இருந்து வந்த அறிவிப்பு
நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களைத் தேடிச்சென்று தூக்கி வாகனத்தில் ஏற்றிச் செல்வதை நிறுத்திக் கொள்ளும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசேட சுற்று நிருபமொன்றை வெளியிட்டு பொலிஸாருக்கு இந்தக் கட்டளையை நேற்று பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு நபர்களை பொலிஸார் தூக்கிச் செல்கையில் நபருக்கு தொற்று இருந்தால் பொலிஸார் இடையே தொற்று பரவும் அபாயம் இருப்பதை பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கைது செய்யப்படுகின்ற நபர்கள் ஒரே ஜீப் வண்டியில் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதிலும் கொரோனா பரவல் அச்சம் ஏற்படும் என்றும் அந்த சுற்று நிருபத்தில் கூறப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments