Header Ads

சுற்றிச் சுற்றி வட்டமிட்ட ஹெலிகொப்டர்கள் - கொழும்பில் அச்சம்

 

கொழும்பு - பொறளை உள்ளிட்ட பகுதிகளின் வான்பரப்பில் இன்று காலை சில ஹெலிகொப்டர்கள் சுற்றிச் சுற்றி வட்டமிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், :-

உலக மே தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது - மே தினத்தை முன்னிட்டு கொரோனா அச்சம் உள்ளதால் வழமையாக நடத்தப்படும் ஊர்வலம் மற்றும் கூட்டங்களை அனைத்துக் கட்சிகளும் நிறுத்தியுள்ளன. 

எனினும் சிலர் கூட்டங்களை மாத்திரம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். 

இவ்வாறு கொரோனா விதிகளை மீறுவோரை கண்காணிக்க, மேற்படி ஹெலிகாப்டர்கள் பொறளை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 


No comments

Powered by Blogger.