இலங்கையிலிருந்து இன்று முதல் விமான சேவைகள் நிறுத்தம்
இன்று முதல் இலங்கையிலிருந்து ஐந்து நாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பிரிட்டன், இத்தாலி, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளுக்கு பயணிகள் விமான சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது.
கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட நாடுகளில் இலங்கை பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் மேற்கண்ட நாடுகளிலிருந்து பயணிகளின் வருகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சரக்கு விமான சேவைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments