Header Ads

தனியார் வாகனத்தில் பயணிப்பவரா நீங்கள்? வெளியானது தெளிவுபடுத்தல்

 

தனியார் வாகனங்களில் பயணிப்பவர்கள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெளிவுபடுத்தியுள்ளது.

பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் பி. டி. கொக்கலகேஇது தொடர்பில் தெரிவிக்கையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக பயணம் செய்யும் போது வாகனத்திற்குள் முககவசம் அணியத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

எனினும் பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தனியார் வாகனத்தில் பயணித்தால் அனைவரும் முகமூடி அணிய வேண்டும் என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் தனியார் வாகனத்தில் பயணம் செய்யும்போது அனைவரும் முககவசம் அவசியம் என்று ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டதை அடுத்து டொக்டர் கொக்கலகே இந்த விளக்கத்தை வெளியிட்டார்.

சாரதியைத் தவிர்த்து, இரண்டு பயணிகளை மட்டுமே வாகனத்தில் பயணிக்குமாறும் சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.