நாட்டை அவமதித்தாரா பசில்? வெளிவரும் தகவல்
தகவல் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருந்த முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச திடீரென அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளமை குறித்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஸவின் இந்த நடவடிக்கையானது, நாட்டை அவமதிக்கும் செயலாகவே கருதுவதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இச் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு பணிக்குழு உட்பட நாட்டின் பொருளாதாரத்தின் பொறுப்பில் பாரிய பங்கு வகிக்கும் ஜனாதிபதி செயலணித் தலைவராக இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதை நாம் ஏற்கமாட்டோம்.
அவருக்கு எந்தவொரு தீவிரமான உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்று அவரது நெருங்கிய உறவினர்கள் பகிரங்கமாகக் கூறிய பின்னணியில் ஒரு மருத்துவத் தேவைக்காக அவர் வெளிநாடு சென்றிருப்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் இன்று மத்தியில் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது ஒரு தொற்றுநோயை எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பு மற்றும் தீர்க்கமான பங்கை ஏற்றுக்கொண்ட அல்லது ஒப்படைத்த நபர் - தாம் வகித்த பதவிகளை விட்டு நாட்டை விட்டு வெளியேறியிருப்பது நாட்டை அவமதிப்பதற்கு சமமாகும் என்றார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments