Header Ads

சட்டவிரோத கொலைகளுக்கு இடமளிக்கமுடியாது


குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக முன்னெடுக்கும் சட்டவிரோத கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் சர்வாதிகார போக்கை நோக்கி நகர்வதாகவும் அதற்கெதிராக ​ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சந்தேகநபர்கள், பொலிஸாரால் படுகொலை செய்யப்படும் போது, அரசாங்கம் சட்டவிரோத ஆட்சியில் ஈடுபடும் பாசிஸ அரசாங்கமாக மாறி வருகிறது. இதுபோன்ற கொலைகள் மூலம்  சந்தேகநபருடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும்  மேல்நிலை வர்த்தகர்கள் சட்டத்திலிருந்து நழுவி விடுகின்றன. இவையெல்லாம். சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்ட ஆட்சியை அமுலாக்கும் நிறுவனங்களின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்யும் என்றார்.

 “நாட்டின் பாதுகாப்பையும் சட்டத்தையும் பலப்படுத்த வேண்டும். நீதியை நிர்வகிக்கும் செயல்முறையை நாம் பாதுகாக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க வேண்டும். கொலைகாரர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், மற்றும் சிறுவர் துன்புறுத்துபவர்களிடமிருந்து விடுபட்ட நாகரிக சமுதாயமாக நம் நாடு இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்” என்றார்.

 இதுபோன்ற குற்றங்களைச் செய்யும் அனைவரையும் கடுமையாக தண்டிப்பது எங்கள் கொள்கையாகும் எனத் தெரிவித்த அவர், ஆனால், ஒரு நீதித்துறை செயல்முறை செயல்படுகிறது. நாம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். நீதி செயல்முறையை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

பாசிசத்தை செயல்படுத்த நாம் அனுமதிக்க முடியாது. நம் நாட்டில் சர்வாதிகார அரசாங்கம் இருக்கக்கூடாது. இந்த கொலை அலைகளின் மூலம் மக்களின் உரிமைகள் இழக்கப்பட்டுள்ளன. மீறப்பட்டுள்ளன. மனித உரிமைகள் குறித்து உலகம், நம் நாட்டுக்கு சவால் விடும் ஒரு நேரத்தில், நம் நாட்டைப் பாதுகாப்பது, மக்களைப் பாதுகாப்பது மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவது எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மீறக்கூடாது என்றார்

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.