இந்தியாவுக்கான விமானப்போக்குவரத்தை நிறுத்தவும்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் விமானங்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்த ஹர்ஷன ராஜகருண எம்.பி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இலங்கை ஏன் அஞ்சுகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
கொரோனா வைரஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் மோசமான நிலைமையில் இல்லை என்றபோதும், பல நாடுகள் இலங்கையர்களுக்குத் தடை விதித்துள்ளன என்றும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்துவதைவிட, விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டை முடக்குவதற்கு சுகாதார அமைச்சர் இனங்கியிருக்கின்றபோதிலும், அரசியல்வாதிகளே அதற்கு தடையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments