கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்! சீரம் நிறுவனம்
கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்’என சீரம் நிறுவன நிறைவேற்று அதிகாரியான அடர் பூனவல்லா கூறி உள்ளார்.
மேலும், இந்திய மத்திய அரசு புதிதாக எந்த தடுப்பூசிக் கோரிக்கையையும் தமக்கு தரவில்லை என வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவிஷீல்ட் மருந்தை புனேவில் உள்ள சீரம் நிறுவனமும், கோவாக்சினை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி செய்கின்றன.
முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், கடந்த மே முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.
ஆனால், தற்போதைய நிலையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை 11 மாநிலங்கள் மட்டுமே தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சீரம் நிறுவன நிறைவேற்று அதிகாரியான அடர் பூனவல்லா இங்கிலாந்தில் ‘ஃபினான்சியல் டெய்லி’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘‘தற்போது மாதத்திற்கு 6-7 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஜூலைக்குப் பிறகுதான் 10 கோடி டோஸ் உற்பத்தியாக அதிகரிக்கப்படவுள்ளது.
எனவே இன்னும் 2-3 மாதத்திற்கு தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நீடிக்கும். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இவ்வளவு சீக்கிரத்தில் தாக்கும் என அதிகாரிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments