ஆபத்தான நிலையில் இலங்கை - தொற்று நோய் விஞ்ஞான பிரிவு எச்சரிக்கை
இலங்கையில் நாளாந்தம் இரண்டாயிரத்தை அண்மித்த அளவில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால் சுகாதார கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது அதிக அளவான தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார.
தற்போது நாட்டில் 17000க்கும் அதிகமான நோயாளிகள் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர். எதிர்வரும் நாட்களிலும் 2000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் சுகாதார கட்டமைப்பிற்கு அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அனைத்து மக்களும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவிற்கு மாத்திரம் அனைத்தையும் மேற்கொள்ள முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments