அசாத் சாலி தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சிகிச்சை பெறும் நிலையில், அவரை தற்போதைய சூழலில் சுகாதாரத் துறையின் அனுமதியுடன் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவொன்றுக்கு மாற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று பரிசீலிக்கப்பட்ட போதே, அவரின் கோரிக்கையை ஏற்று இந்த அனுமதியை உயர் நீதிமன்றம் வழங்கியது. குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது கடந்த தவணையின் போது அசாத் சாலி விவகார விசாரணைகளை நிறைவு செய்ய 3 வார கால அவகாசத்தை சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோரியிருந்த நிலையில், அவ்விசாரணைகள் இன்னும் முடியடையவில்லை என அவர் மன்றுக்கு அறிவித்தார்.
இதன்போது அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட் சட்டத்தரணி கெளரி சங்கரிதவராசாவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதங்களை முன் வைத்ததுடன், கடந்த 18 ஆம் திகதி தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தையும் அடிப்படையாக கொண்டு, விடயங்களை தெளிவுபடுத்தினார்.
அத்துடன் கடந்த 16 ஆம் திகதி அசாத்சாலி சுகயீனம் காரணமாக தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் தர்போது அவர் சாதாரண சிகிச்சை அறையான ( வோர்ட்) 49 ஆம் அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு தற்போதும் அவர் சிகிச்சைப் பெறுவதாகவும் கூறினார். இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அசாத்சாலிக்கு முடியுமான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டதாகவும் கூறினார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments