தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத சஜித்; வெளியான காரணம்
எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ இதுவரை கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளதுடன் அதற்கான காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டபோது சஜித் பிரேமதாஸ அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.
அதன்பின்னர் கடந்த 13ஆம் திகதிக்குப் பின் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முன்னாள் சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்னவின் தலையீட்டில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் பயணக்கட்டுப்பாடு காரணமாக சஜித் பிரேமதாஸவுக்குத் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாமற் போனதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments