குற்றம் செய்திருந்தால் தூக்கிலிடுங்கள் ; ரிஷாட் பதியுதீன்
தான் ஏதேனும் தவறு செய்தால் தனக்கு மரண தண்டனை விதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் இன்று நாடாளுமன்றில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், தான் கைது செய்யப்பட்டு 22 நாட்களுக்கு மேல் சென்றுள்ளபோதும் இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதலுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத தன்னை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து இவ்வாறு பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments