உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையால் சர்ச்சை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என குறிப்பிட்டுள்ள அவர் விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் விசாரணைகளை பூர்த்தி செய்யதவறியுள்ளதுடன் சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு அவசியமான தகவல்களை வழங்க தவறியுள்ளதால் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாத நிலை காணப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சிஐடியினர் விசாரணைகைள பூர்த்தி செய்யாததன் காரணமாக சதியில் ஈடுபட்டவர்கள் ஒத்துழைத்தவர்களிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா அதிபர் நேற்று அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். 20ம் திகதி சட்டமா அதிபர் ஓய்வுபெறுகின்றார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments