Header Ads

சிறைக்குள் ரஞ்சனுக்கு கிடைத்த சலுகை


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைக்குள்ளேயே தொலைக்காட்சி வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்க தற்போது அம்பாந்தோட்டை – அங்குனகொல பெலஸ்ஸ சிறையில் உள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இதனைத் தெரிவித்துள்ளார். இதுதவிர, மின்விசிறி ஒன்றும் அவருக்கு அளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ரஞ்சனுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.