நான் புலி என்றால் நீங்கள் நாயா? சாணக்கியன் பதிலடி
கிழக்கு மாகாணத்திற்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்கும் முயற்சிகளில் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாகவே, கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் குறைப்பதற்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில முஸ்லிம் தலைவர்கள் முயற்சிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தைச் சார்ந்து செயற்படும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்ட சில தமிழ் பிரதிநிதிகளும், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில் குரல் எழுப்ப முடியாது மௌனம் காப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது உரைக்கு இடையூறு விளைவித்த ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு எதிராகவும் கூட்டமைப்பு உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments